புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலியானார். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதையடுத்து, உள்துறை மந்திரி அமித்ஷா, துணை நிலை ஆளுநர் சம்பவம் நடைபெற்ற பஹல்காமிற்கு செல்கின்றனர்.