சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

 புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலியானார். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே, சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி உள்துறை மந்திரி அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். காஷ்மீர் நிலைமையை கண்காணிக்கும் படி உத்தரவிட்ட பிரதமர் மோடி, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்தக் கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதி அசைக்க முடியாதது, அது இன்னும் வலுவடையும் என பதிவிட்டுள்ளார்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form