சாரதிகளை சுற்றிவளைக்கும் தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார்!

 சாரதிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தும்  சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காண நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்கு காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

வீதி பாதுகாப்பை மேம்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் ஆதாரமாகச் செயல்படும், இதனால் அதிகாரிகள் போக்குவரத்து விதிமீறல்களுக்கான தெளிவான ஆதாரங்களை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form