மாலைத்தீவில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி

 மாலைத்தீவில் (Maldives) இலங்கை இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலை இன்று (16.04.2025) காலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தொடங்கஸ்லந்த - உடு ஹொரம்புவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

15 நாட்களுக்கு முன்பு தனது தங்குமிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிக்கு குறித்த இளைஞன் சென்ற நிலையில் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

இந்நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு, கடலில் அவரது உடல் மிதப்பதைக் கண்டு மாலைத்தீவு பிரஜை ஒருவர் அந்நாட்டு காவல்துறைக்கு தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 குறித்த இலங்கை இளைஞன் நீரில் மூழ்கியதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மாலைத்தீவு அரசாங்கமும் நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், உயிரிழந்த இளைஞன் மாலைத்தீவில் சுமார் 3 ஆண்டுகள் சாரதியாக  பணி புரிந்து, 3 மாதங்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்து மீண்டும் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form