வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள்

 அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்படும் பரஸ்பர வரிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளது.

இதன்படி குறித்த குழு அடுத்த வாரம் அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா பாரியளவில் சுங்க வரி விதித்துள்ளது.

இந்த வரி விதிப்பு இலங்கையின் ஆடைக் கைத்தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form