ஸ்பெயின், போர்ச்சுக்கலில் மிகப்பெரிய அளவில் மின்தடை: முக்கிய சேவைகள் பாதிப்பு

 ரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் இன்று (திங்கட்கிழமை) காலை திடீரென மிகப்பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது. இதனால் சுரங்கப்பாதை நெட்வொர்க்ஸ், போன் லைன்கள், ஏடிஎம் மெஷின்கள், போக்குவரத்து டிராபிக் சிக்னல்கள் சேவை பாதிக்கப்பட்டன.

பிரான்ஸ் தலைநகர் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மொத்த மக்கள் தொகை 5 கோடியாகும். இவர்களின் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியாகவில்லை.

போர்ச்சுக்கலில் சுமார் 1.06 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கேயும் பயங்கர மின்தடை ஏற்பட்டது. தலைவர்கள், வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் பாதிக்கப்பட்டன.

மின்சாரம் வழங்கும் நெட்வொர்க்கில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மின்சார தடை ஏற்பட்டதாக போர்ச்சுக்கல் தெரிவித்துள்ளது.

போர்ச்சக்கலில் நீதிமன்ற பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏடிம் மற்றும் மின்னணு கட்டணம் சேவைககள் பாதிக்கப்பட்டன.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form