நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது பெய்து வரும் இடைவிடாத மழையுடனான காலநிலையினால் நாடு முழுவதும் நுளம்புப் பரவல் அதிகரித்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சிறப்பு மருத்துவர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
இதற்கிடையில், ஐந்து மாவட்டங்கள் டெங்கு பரவக்கூடிய அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்தவகையில் கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை உடனடியாக அழிக்குமாறு வைத்தியர் சமரவீர பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.