தேசபந்துவை பதவி நீக்கம் செய்ய காவல்துறை விசாரணைக் குழு நியமனம்

 பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு உதவும் வகையில் காவல்துறை விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இரண்டாவது தடவையாக நேற்று  நாடாளுமன்றத்தில் கூடியபோதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்கால விசாரணை செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது, சம்பந்தப்பட்ட தரப்பினரை எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பது தொடர்பில்  கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மேலதிக மன்றாடியார் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் மற்றும் பிரதி மன்றாடியார் நாயகம் ரஜித பெரேரா ஆகியோரை சட்டமா அதிபர் தெரிவுசெய்துள்ளார்.

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழுவொன்று கடந்த 23 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. 




Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form