இலங்கையில் இன்று துக்க தினம்; அரைக் கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி

 இலங்கையில் தேசிய துக்க தினமாக இன்றைய தினத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று நடைபெறவுள்ளது.

இதனையொட்டி இலங்கையில் தேசிய துக்க தினமாக இன்றைய தினத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மேலும் அந்த அறிக்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form