விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

 வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் லக்ஸ்மன் பண்டார பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பரவூர்தி ஒன்றில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

மரணம் தொடர்பான விசாரணையினை வவுனியா பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form