காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: அவசரமாக நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி

 புதுடெல்லி:

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றார்.தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி செவ்வாய்கிழமை (நேற்று) காலையில் சவுதி அரேபியாவில் சென்று இறங்கினார். முன்னதாக சவுதி அரேபியாவின் வான்பரப்பில் பிரதமர் மோடி பயணித்த விமானம் சென்றபோது, அந்நாட்டின் போர் விமானங்கள் கான்வாயாக மாறின.

பிரதமர் மோடி பயணித்த விமானத்தின் முன் மற்றும் பின் பகுதியில் வட்டமிட்டபடி சவுதி அரேபிய விமானங்கள் பாதுகாப்பு மரியாதை செலுத்தின.

பிரதமர் மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார். அங்கு சென்ற அவருக்கு குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பை பிரதமர் மோடியும் ஏற்று கொண்டார்.

இந்தநிலையில் 2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி காஷ்மீர் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பயணத்தை பாதியில் ரத்து செய்துள்ளதாகவும், நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இன்று காலை இந்தியா வந்திறங்குகிறார். தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான் மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form