அநுர அரசாங்கத்தைக் கட்டுப்படுத்த உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி! - எதிரணிகள் கொள்கையளவில் இணக்கம்

 தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு வலையைக் கட்டுப்படுத்தவதற்குரிய அரசியல் போரை முன்னெடுத்து வரும் எதிர்க்கட்சிகள், உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன.

இது தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகள் ஆரம்பகட்ட பேச்சுகளை ஆரம்பித்துள்ளன எனவும், கூட்டணி அமைப்பதற்குக் கொள்கை அடிப்படையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மைப் பலம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்காது என எதிரணிகள் நம்புகின்றன.

எனவேதான் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்து வருகின்றன.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form