தமிழர் பகுதியில் தந்தையின் டிப்பர் வாகனத்தால் ஒன்றரை வயது குழந்தை பலி

 தந்தை செலுத்திய டிப்பர் வாகன சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று (18.04.2025) மாலை கிளிநொச்சி (Kilinochchi) காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அம்பாள் குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (18) மாலை தந்தை செலுத்திய டிப்பர் வாகன முன் சில்லுக்குள் நசியுண்டு ஒன்றரை வயதுடைய பெண்குழந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து, சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம் உடற்கூற்று விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  




Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form