பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்பிய துருக்கி?.. சர்ச்சையும் விளக்கமும்

 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது.

இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் துருக்கியும் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை வழங்கியதாகத் தகவல் வெளியானது.

துருக்கி விமானப்படைக்குச் சொந்தமான 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானமானது நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு சென்றுள்ளது என்றும் இதில் ஏராளமான போர் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

விமானங்கள் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தன. ஆனால் அவற்றில் ராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்பட்டதற்கான விவரங்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில், போர் விமானங்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது. சரக்கு விமானம் மட்டுமே பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும் துருக்கி விளக்கமளித்துள்ளது. 



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form