யாழ் காரைநகர் கடலில் மூழ்கிய குடும்பஸ்தர் - காவல்துறையினர் செய்த செயல்

 யாழ். காரைநகர் கடலில் திடீரென நீரில் மூழ்கிய குடும்பஸ்தர் ஒருவர் காவல்துறையினரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது  

இரத்தினபுரியை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஒரு குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர்.

சுற்றுலா வந்த அவர்கள் காரைநகர் கடலில் நீராடிக் கொண்டு இருந்தவேளை குறித்த நபர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதன்போது விரைந்து செயற்பட்ட உயிர் காக்கும் காவல்துறையினரான வினோதன் மற்றும் வேரகொட ஆகியோர் அவரை தண்ணீரில் இருந்து மீட்டு முதலுதவி அளித்தனர்.

பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


 

 

 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form