மனைவி உஷாவுடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்!

 அமெரிக்க அதிபர் ஜே.டி.வான்ஸ், 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்திருக்கிறார். அவரது மனைவியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா, 3 குழந்தைகள் ஆகியோருடன் வந்துள்ளார்.

டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் அவர்கள் வந்த விமானம் 9.45 மணிக்கு தரை இறங்கியது. அரசு சார்பில் அவர்களுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு மரியாதைதான், பரதநாட்டிய கலை நிகழ்ச்சியையும் வான்ஸ் தம்பதி கண்டு களித்தது.

துணை அதிபர் வான்சுடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் 4 பேர் உடன் வந்துள்ளனர்.

டெல்லி விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் வான்சும், அவரது குடும்பத்தினரும் டெல்லியில் உள்ள நாரா யண் அக்ஷர்தாம் கோவி லுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் வழிபாடுகள் செய்தனர்.

இந்தியாவில் 4 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வான்ஸ் திட்டமிட்டுள்ளார். இன்று காலை அவர் நாராயண் ஆலயத்தில் வழிபாடு முடித்ததும் டெல்லியில் உள்ள பாரம்ப ரிய இந்திய கைவினை பொருட்கள் விற்பனை வளாகத்துக்கு சென்றார். அங்கு விற்கப்படும் பாரம்ப ரிய பொருட்களை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

இதையடுத்து டெல்லி மவுரியா நட்சத்திர ஓட்ட லுக்கு சென்று தங்கி ஓய்வு எடுத்தார். இன்று பிற்பகலில் அவரை இந்திய அதிகாரிகள் குழு சந்தித்து பேசுகிறது.

இதைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குழு பிரதமர் மோடி வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு பிரதமர் மோடியும், வான்சும் சந்தித்து பேசுவார்கள். அதே சமயத்தில் இரு நாட்டு குழுக்களும் சந்தித்து பேச்சு நடத்தும்.

அமெரிக்கா சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் தலைமையிலான குழுவினர் இடம் பெறு வார்கள். இந்தியா சார்பில் பிரதமர் மோடி தலைமை யில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

பேச்சுவார்த்தையின் போது இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குறிப்பாக இருதரப்பு வர்த்தகம், வரி, ராணுவம், விண்வெளி ஆய்வு ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியா-அமெரிக்கா உறவுகளை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிந்ததும் வான்சுக்கும், அமெரிக்க அதிகாரிகள் குழுவுக்கும் பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு முடிந்தவுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு செல்கிறார். இன்று இரவு ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் தங்குவார். நாளை (செவ்வாய்க்கிழமை) ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளார்.

நாளை மறுநாள் (புதன்கிழமை) வான்சும், அமெரிக்க அதிகாரிகளும் ஆக்ராவுக்கு செல்ல உள்ளனர். அங்கு தாஜ்மகாலை துணை ஜனாதிபதி வான்சும், குடும்பத்தினரும் கண்டுகழிக்க உள்ளனர்.

மீண்டும் ஜெய்ப்பூருக்கு திரும்பும் வான்ஸ் அங்கிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வார்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form