கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கும் கோடைகால நோய்களை தவிர்ப்பதற்கும் சிறந்த மருந்தாக பனை நுங்கு விளங்குகிறது.
சாலையோரங்களில் ஆங்காங்கே விற்கப்படும் பனை நுங்குகளை நாம் பெரிதாகக் கவனிப்பதில்லை. ஆங்கிலத்தில் ஐஸ் ஆப்பிள்கள் என்று அழைக்கப்படும் இவற்றை வெளிநாட்டினர் ஆர்வத்துடன் சாப்பிட்டு வருகின்றனர்.
அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினரும் பனை நுங்குவை மிகவும் விரும்புகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி-புவனகிரி மாவட்டத்தை சேர்ந்த முவ்வா ரமேஷ் ஸ்வேதா என்பவர் தெலுங்கு புட்ஸ் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு பனை நுங்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
2 நாட்களுக்கு ஒருமுறை 1500 கிலோ வரை 20 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 முதல் 300 கிராம் வரை பாக்கெட்டுகளில் அடைத்து அனுப்பி வைக்கின்றனர்.
முனுகோடு மற்றும் தண்டுமல்காபுரம் கிராமங்களை சேர்ந்த பனை ஏறும் தொழிலாளர்களிடம் இருந்து நுங்கு சேகரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இதன் மூலம் பனை மர தொழிலாளர்கள் 350 பேர் வேலை மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர்.