உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல் மருத்துவர் அனுஷ்கா முடி மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளார். இந்த சிகிச்சைக்காக மருத்துவர் அனுஷ்கா ஒவ்வொருவரிடம் ரூ.40,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பெற்றுள்ளார்.
மேலும், அவரிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலர் முகம் வீங்கி, உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அனுஷ்கா தலைமறைவானார். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மருத்துவர் அனுஷ்காவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த பல் மருத்துவர் அனுஷ்கா திவாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.