3 உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமையே நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், ஜே.கே. மகேஸ்வரி மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலீஜியம் நேற்று கூடியது.
இந்த கூட்டத்தின் முடிவில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது.
மேலும், ஐந்து புதிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்கவும் 22 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.