திருவனந்தபுரம்:
தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 4 நாட்கள் முன்னதாக மே 27-ந்தேதியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 23-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு வந்த ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டி தொடங்கவில்லை.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் தமிழகத்திலும் மழை பெய்யும். இதனால் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டை பொறுத்தவரை விவசாயத்துக்கு பருவமழை மிகவும் முக்கியமானதாகும். தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.