பஞ்சாப்பின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் (Sri Muktsar Sahib) மாவட்டத்தில் அமைந்துள்ள லம்பி கிராமத்திற்கு அருகே இன்று (30) காலை பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர், சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
தொழிற்சாலைக்குள் இன்னும் பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீ முக்த்சர் சாஹிப்பின் லம்பி பகுதியில் உள்ள சிங்காவலி-கோட்லி வீதியில் அமைந்துள்ள இரண்டு மாடி தொழிற்சாலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
வெடிப்பைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட அவசரகால மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதேநேரத்தில் உள்ளே சிக்கியிருக்கக்கூடியவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வெடி விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவாகத் தெரியாத நிலையில், அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.