மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மால்வானி பகுதியை சேர்ந்தவர் ரீனாஷேக். தனது கணவரை பிரிந்த இவர் தனது 2½ வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ரீனாஷேக் தனது குழந்தையை மயங்கிய நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு மூச்சு திணறி மயங்கி விழுந்ததாகவும், அவர் டாக்டரிடம் கூறினார்.
சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. அப்போது குழந்தையின் அந்தரங்க பகுதியில் கடுமையான காயங்கள் இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து நடந்த பிரேத பரிசோதனையில் அந்த குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அதில் மூச்சு திணறி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் தாயார் ரீனாஷேக்கை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது ரீனாஷேக்குக்கும் பர்கான் ஷேக் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த பர்கான்ஷேக், ரீனாஷேக்கின் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதில் குழந்தை மூச்சு திணறி இறந்ததும் அம்பலமானது.
மேலும் தனது காதலனின் கொடூர செயலை ரீனாஷேக் வேடிக்கை பார்த்ததும், அவர் குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பர்கான்ஷேக், ரீனாஷேக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.