புதுடெல்லி:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும்போது திருப்பி பதிலடி கொடுக்க இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்திய எல்லை மாநிலங்களில் உள்ள 24 முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதால் 14-ம் தேதி வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மேலும் 8 விமான நிலையங்களை வரும் 15-ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பந்தர், கிஷன்கர், பாட்டியாலா, ஷிம்லா, ஜெய்சால்மர், பதான்கோட், ஜம்மு, பிகானர், லே, போர்பந்தர், தரம்சாலா, பதிண்டா, ஜோத்பூர், ஜாம் நகர், பூஜ், ஆதம்பூர், அம்பாலா, ஹல்வாரா, ஹிண்டன் காசியாபாத், கண்ட்லா, கங்ரா, கேசோட், குலுமணாலி, முந்த்ரா உள்ளிட்ட விமான நிலையங்கள் அடங்கும்.