சென்னை :
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூ, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனையில், அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் களமிறங்கப்போவது யார்? என்பது தொடர்பாக 41 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் தனித்தனியே சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். மேலும் வருகின்ற சட்டசபை தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்கி வருகிறார்.
பூத் கமிட்டி அமைப்பது முக்கியம் என்று அறிவுறுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி, விஜய் தொடர்பாக பேச அ.தி.மு.க.வினருக்கு தடை விதித்திருப்பதாகவும், தி.மு.க. மீதான விமர்சனங்களை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.