ஆந்திர மாநிலம் விஜயவாடா-பெங்களூரு இடையே புதியதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கபட உள்ளது.
இந்த ரெயில் 9 மணி நேரத்தில் விஜயவாடாவில் இருந்து பெங்களூரு சென்றடையும்.
இது நடைமுறைக்கு வந்தால் சுமார் 3 மணிநேர பயண நேரம் மிச்சமாகும். திருப்பதி செல்லும் பக்தர்களுக்கும் பெங்களூரு செல்பவர்களுக்கும் இந்த ரெயில் பயனுள்ளதாக இருக்கும். மொத்தமுள்ள 8 பெட்டிகளில் 1 ஏசி சேர்கார்களும் ஒன்று நிர்வாக சேர்கார் உள்ளது.
செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் இந்த ரெயில் விஜயவாடாவில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு தெனாலியை காலை 5.39 மணிக்கும், ஓங்கோலை காலை 6.28 மணிக்கும், நெல்லூரை காலை 7.43 மணிக்கும், திருப்பதியை காலை 9.45 மணிக்கும், சித்தூர் காலை 10.21 மணிக்கும், காட்பாடி காலை 11.13 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்தை பிற்பகல் 1.38 மணிக்கும், பெங்களூருவை பிற்பகல் 2.15 மணிக்கும் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.58 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், மாலை 5.23 மணிக்கு காட்பாடி, மாலை 5.49 மணிக்கு சித்தூர், மாலை 6.55 மணிக்கு திருப்பதி, இரவு 8.18 மணிக்கு நெல்லூர், இரவு 9.29 மணிக்கு ஓங்கோல், இரவு 10.42 மணிக்கு தெனாலி மற்றும் இரவு 11.45 மணிக்கு விஜயவாடாவை வந்தடையும் என தெரிவித்துள்ளனர்.