டாக்கா:
வங்கதேசத்தில் புதிய இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய அரசாங்கம் போலீசாரை களம் இறக்கியதை தொடர்ந்து சுமார் 200 பேர் இறந்தனர். இதனால் வன்முறை தீவிரமான நிலையில் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் நேற்று பெரும் பேரணி நடத்தினர்.
தலைநகர் டாக்காவில் சாலையில் குவிந்த அவர்கள் கட்சிக் கொடிகளை ஏந்தியும், பதாகைகளை சுமந்தபடியும் சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.