வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!

 வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று(04) பிற்பகல் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான 55 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டமை குறிப்பித்தக்கது. 




Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form