பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தி னால் தங்களது பொருளாதாரம் மிக மிக படுபாதாளத்துக்கு சென்று விடும் என்று பாகிஸ்தான் தலைவர்கள் பயத்தில் உள்ளனர்.
இதனால் அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் தலை வர்கள் இந்தியாவை மிரட்டியபடியே உள்ளனர். ஆனால் இந்தியா நேரடி போருக்கும், மறைமுக போருக்கும் தீவிரமாக தன்னை தயார்படுத்தி வருகிறது.
இதையடுத்து பாகிஸ்தான் வெளிநாடுகளிடம் ஆயுத உதவி கேட்டு கெஞ்சத் தொடங்கி இருக்கிறது. தற்போது பாகிஸ்தான் வசம் 4 நாட்கள் போருக்கு தேவையான பீரங்கி குண்டுகள் மட்டுமே உள்ளன. எனவே போர் ஏற்பட்டு அது நீடிக்கும்பட்சத்தில் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும் என்று பயப்படுகிறார்கள்.
இதை சமாளிப்பதற்காக துருக்கி நாட்டிடம் ராணுவ உதவி கேட்டு பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து துருக்கி நாடு தனது போர் கப்பல்களில் ஒன்றை பாகிஸ்தானுக்கு உதவ அனுப்பியது.
அந்த போர் கப்பல் தற்போது கராச்சி துறை முகத்துக்கு வந்துள்ளது. அந்த துறை முகத்தில் அந்த போர் கப்பல் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரதமர் மோடியை நேற்று இந்திய விமானப்படை தளபதி மார்ஷல் ஏ.பி.சிங் சந்தித்து பேசினார். அப்போது அவர் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட ரஃபேல் விமானங்கள் தயார் நிலையில் வைத்து இருப்பதாக பிரதமரிடம் விளக்கி கூறினார்.
ஏற்கனவே கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி பிரதமரை சந்தித்து அரபிக் கடலில் உள்ள இந்திய போர் கப்பல்கள் பற்றி விளக்கி உள்ளார். இதன் மூலம் இந்திய கடற்படை கப்பல்களும், போர் விமானங்களும் தயார் நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது.