படகில் தத்தளித்த மீனவர்களை மீட்ட விமானப் படையினர்!

 கடல் கொந்தளிப்பால் பலப்பிட்டி கடற்கரையில் டிங்கி படகில் சிக்கித் தவித்த மூன்று மீனவர்கள் இலங்கை விமானப்படையினரால் (SLAF) மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிக்காக இரத்மலானாவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டதாக விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மூவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக SLAF மேலும் கூறியது.

பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் பேரில் இந்த மீட்புப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது கடுமையான பாதகமான வானிலையை சந்தித்து வருகிறது.

இதனால், கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று வீசும் என்பதால் கடற்படை மற்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form