உத்தரப் பிரதேசத்தில் ஓடும் காருக்குள் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது தோழி கொலை செய்யப்பட்டார்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தீப், அமித் மற்றும் கௌரவ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் அந்த 17 வயது சிறுமியையும் அவரது 19 வயது தோழியையும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிரேட்டர் நொய்டாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு காரில் கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்டதை உணர்ந்து பெண்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஓடும் காரிலிருந்து 19 வயது பெண்ணை குற்றவாளிகள் கீழே தள்ளிவிட்டனர். மேலும் 17 வயது சிறுமியை மூவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி காரில் இருந்து தப்பி, காவல் நிலையத்தை அடைந்து நடந்த சம்பவத்தைப் தெரிவித்தார்.
பின்னர் அலிகார்-புலந்த்ஷர் நெடுஞ்சாலை அருகே குற்றவாளிகள் மூவரும் பயணித்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தப்பிக்க முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கால்களில் சுட்டுப் பிடித்தனர். சாலையில் விழுந்து படுகாயமடைந்த 19 வயது பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
![]() |