ரஷியா - உக்ரைன் உடையே கடந்த 2022 ,முதல் போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் எடுத்து வருகின்றன.
இதற்கிடையே போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார்.
மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். பிரச்சினைக்கான காரணங்களை நீக்கவும், அமைதியை நோக்கி செல்வதற்கான வழிமுறைகளைக் காண, பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார். 15ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றும் என்றும் புதின் தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு பதில் அளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக உள்ளது. இந்த இனப்படுகொலையை இன்னும் ஒரு நாள் கூட தொடர்வது பயனற்றது.
இருப்பினும், நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை ரஷ்யா உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் உக்ரைனும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கும் என்று தெரிவித்தார்.
மற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முதலில் போர்நிறுத்தத்திற்குப் பிறகுதான் தொடங்கும் என்று ஜெலென்ஸ்கியின் தலைமைத் தளபதி தெரிவித்தார். ரஷியா தங்கள் போர் லட்சியங்களை வார்த்தை ஜாலங்களுக்குப் பின்னால் மறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்..