போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு புதிய போப் ஆக லியோ XIV மே 8 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் போது போப் லியோ தனது முதல் உரையை ஆற்றினார்.
புதிய போப்பின் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடினர். அப்போது இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அவர் வரவேற்றார்.
இன்னொரு போர் ஒருபோதும் வரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். போப் லியோ தனது உரையில் உலகெங்கிலும் உள்ள மோதல்கள் குறித்தும் பேசினார்.
அவர் தனது உரையில், காசாவில் துன்பப்படும் மக்களையும், உக்ரைனில் நடந்த போரினால் இயல்பு வாழ்க்கையை இழந்த மில்லியன் கணக்கான மக்களையும் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் அமைதியின் அதிசயம் நிகழ கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்