26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியாவின் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.
இதனால் பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து பல வீரர்கள் பணியை விட்டுச் செல்வதாக ஊடக அறிக்கைகள் வந்தன. இந்நிலையில் பாகிஸ்தானின் லக்கி மார்வட் தொகுதியை சேர்ந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உடைய தெக்ரிக் இ இன்சப் கட்சி எம்.பி. ஷர் அப்சல்கான் மர்வட் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு நேர்காணலில், ஒரு நிருபர், "இந்தியாவுடன் போர் நடந்தால், நீங்கள் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு எல்லைக்குச் செல்வீர்களா?" என்று கேட்டார்.
இதற்கு, மர்வட், "போர் வெடித்தால், நான் இங்கிலாந்து செல்வேன்" என்று வெளிப்படையாகப் பதிலளித்தார்.
பின்னர், "பதட்டங்களைக் குறைக்க இந்தியப் பிரதமர் மோடி பின்வாங்குவார் என்று நினைக்கிறீர்களா?" என்று நிருபர் கேட்டபோது, மர்வட் கிண்டலாக, " நான் சொல்வதைக் கேட்க மோடி என்ன என் அத்தை மகனா?" என்று தெரிவித்தார்.