உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பசு பாதுகாப்பு மையங்கள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாட்டுச் சாணம் சார்ந்த இயற்கை வண்ணப்பூச்சு அரசு கட்டிடங்களில் இடம்பெற வேணடும். அதுவும் மிகப்பெரிய அளவிலான உற்பத்தியுடன் நடைபெற வேண்டும்" என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் உ.பி.யின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில் "மாட்டுச் சாணம்: பாஜக அரசின் புதிய சாதனை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ் கருத்து குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் கூறுகையில் "அகிலேஷ் யாதவ் ாட்டுச் சாணம் மற்றும் கால்நடைகளை வெறுக்கிறார். ஆஸ்திரேலியா சென்ற பிறகு அவர் இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை மறந்துவிட்டாரா, அல்லது தனது திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பசு, கங்கை மற்றும் கீதையை அவமதிக்கிறாரா?" என பதில் அளித்துள்ளார்.