ஆபரேஷன் சிந்தூர் - நமது ராணுவத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் - பிரியங்கா காந்தி

 பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து வயநாடு காங்கிரஸ் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நமது ராணுவத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நமது துணிச்சலான வீரர்கள் நமது சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கிறார்கள். கடவுள் அவர்களைப் பாதுகாத்து, பொறுமையுடனும் துணிச்சலுடனும் சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு அபரிமிதமான தைரியத்தைத் தருவாராக. ஜெய் ஹிந்த் என்று தெரிவித்துள்ளார். 



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form