இந்தியா மேற்கொண்டு தாக்குதல் நடத்தவில்லை என்றால் பொறுப்பற்ற நடவடிக்கை எடுக்கமட்டோம்..! பாக். பிரதமரின் ஆலோசகர்

 ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் இந்திய முப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. 9 முகாம்கள் மீது 26 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. அதேவேளையில் ரஃபேல் விமானங்கள் உள்பட 5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்பின் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபின் ஆலோசகர் ராணா சமானுல்லா கூறுகையில் "இந்தியா மேற்குகொண்டு எந்த பதற்றத்தையும் அதிகரிக்கவில்லை என்றால், பாகிஸ்தான் எந்தவொரு பொறுப்பற்ற நடவடிக்கையையும் எடுக்காது என்பதை உலகிற்கு அரசு மற்றும் ராணுவம் உறுதிப்பூண்டுள்ளது.

நாங்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளோம். இந்தியா மேலும் நடவடிக்கை மேற்கொண்டால், அதன்பின் கூடுதலாக பதிலடி கொடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form