மின் வேலியை சுத்திகரித்த போது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு.!

 திருகோணமலை – ஈச்சிலம்பற்று – சூரியநகரில் வயல்வெளியில் யானைத் தடுப்பு மின் வேலியை சுத்திகரித்த போது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

29 மற்றும் 47 வயதுடைய நபர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

காணி உரிமையாளரான 47 வயது நபர், வயலில் பொருத்தப்பட்டிருந்த யானைத் தடுப்பு மின் வேலியை சுத்திகரிப்பு செய்த போது மின்சாரம் தாக்கியுள்ளது. அவரை மீட்க முற்பட்ட அவரது மகளின் கணவரான 27 வயதுடைய இளைஞரும் மின்சார தாக்கத்துக்கு உள்ளானார்.

பின்னர் அவர்கள் இருவரும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form