ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசால் பாகிஸ்தான் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன. பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது.
இந்தியாவில் சிக்கித் தவித்த தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு பாகிஸ்தான் இன்று (வெள்ளிக்கிழமை) அட்டாரி-வாகா எல்லையில் உள்ள வாயில்களை மீண்டும் திறந்தது.
முன்னதாக நேற்று, வியாழக்கிழமை, காலை 8 மணிக்கு பாகிஸ்தான் எல்லையை மூடியது. இதனால் பாகிஸ்தானியர்கள் வெளியேற முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்தனர். பாகிஸ்தான் தங்கள் சொந்த மக்களை ஏற்க மறுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் 24 மணி நேரம் மவுனத்திற்கு பிறகு பாகிஸ்தான் தற்போது தங்கள் எல்லையை மீண்டும் திறந்துள்ளது. இதன்மூலம் எஞ்சியுள்ள பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப வழி ஏற்பட்டுள்ளது.