ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே இன்று ஒரு பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 வயதுடைய அந்த நபர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இருந்து இந்தப் பக்கத்திற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர் விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டார். முன்னதாக மே 3-4 இரவு, பஞ்சாபின் குருதாஸ்பூரில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மற்றொரு பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) கைது செய்தது.
கடந்த சனிக்கிழமையன்று ராஜஸ்தானில் இந்தியப் படைகள் ஒரு பாகிஸ்தான் ரேஞ்சரையும் கைது செய்தன.
ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.