பஹல்காம் சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை கிடைத்ததது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியதை அடுத்து பாஜக அவரைத் விமர்சித்துள்ளது.
கார்கேவின் அறிக்கை துரதிர்ஷ்டவசமானது என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறினார். கார்கேவுக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருபுறம், அவர்கள் நாட்டுடன் இருப்பதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூறுகிறார்கள்.
மறுபுறம், தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்ததால், பிரதமர் காஷ்மீர் பயணத்தைத் தவிர்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது. நாட்டின் எல்லைகள் மோதலுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற விஷயங்கள் எதிர்பாராதது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
இதற்கிடையில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கூறுகையில், கார்கே ஒரு நவீன கால மீர் ஜாபராக மாறி வருகிறார். பிரதமருக்கு எதிரான அவரது அறிக்கைகள் அடிப்படையற்றவை மற்றும் கண்டிக்கத்தக்கவை. கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும். கார்கே எங்கிருந்து, என்ன தகவல்களைப் பெற்றார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
17 ஆம் நூற்றாண்டில் முகலாய அரசில் பணியாற்றிய மிர் ஜாஃபர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக செயல்பட்டவர். வரலாற்றில் மிர் ஜாஃபர் துரோகியாக அறியப்படுகிறார்.