ஆந்திராவில் 8 மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 8 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருபவர் ஞானேஷ்வர். இவரது மனைவி அனுஷா (வயது27). இவர்களுக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அனுஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

ஞானேஷ்வருக்கும் அனுஷாவுக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இன்று காலையும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த ஞானேஷ்வர், 8 மாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதனால் அனுஷா மூச்சுவிட முடியாமல் மயங்கி சரிந்துள்ளார். இதனால் பயந்துபோது ஞானேஷ்வர், மனைவியை உடனடியாக தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அனுஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

பின்னர் போலீசில் சரணடைந்துள்ளார். சிறு வாக்குவாதத்தால் கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form