மணிப்பூர்: மே 3ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்தை கடைபிடிக்க குகி-சோமி மாணவர் அமைப்புகள் வலியுறுத்தல்

 மணிப்பூரின் சில பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களையும் மே 3ஆம் தேதி மூட வேண்டும் என்று இரண்டு குக்கி-சோமி மாணவர் அமைப்புகள் மக்களை வலியுறுத்தியுள்ளன.

இனக்கலவரம் வெடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், மே 3, 2025 அன்று சோமி மாணவர் கூட்டமைப்பு (ZSF) மற்றும் குக்கி மாணவர் அமைப்பு (KSO) ஆகியவை அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடி மௌனமாக நாளைக் கடைப்பிடிக்க" அனைவரையும் வலியுறுத்தியுள்ளன.

மேலும் "அனைவரின் வீடுகளிலும் கருப்புக்கொடிகளை ஏற்ற வேண்டும். தியாகிகளின் கல்லறையில் ஒரு கூட்டு பிரார்த்தனையும், சூரசந்த்பூர் மாவட்ட தலைமையகத்தில் உள்ள நினைவுச் சுவரில் ஒரு பொதுக் கூட்டமும் நடத்தப்படும்" என்றும், பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டன.

மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தினர் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். பெரும்பான்மை சமூகத்தினரான மெய்தி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்ப தெரிவித்து 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி குகி சமூகத்தினர் மிகப்பெரிய பேரணியை நடத்தினர். பேரணியின்போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இனக் கலவரமாக மாறியது.

இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் முதலமைச்சர் என் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட மாநில சட்டமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, பழங்குடியினத் தலைவர்கள் அமைப்பு (ITLF) மே 3 ஆம் தேதி "பிரிவினை தினமாக" அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. குகி-சோ சமூகங்களை ஆழமாகப் பாதித்த இன மோதலில் உயிரழந்தவர்களின் நினைவுக்கூரும் நாளாக இருக்கும் எனத் தெரிவிததுள்ளது.

இம்பால் பள்ளத்தாக்கை அடிப்படையான கொண்டு மெய்தி சமூக அமைப்பான COCOMI, மே 3ஆம் தேதி மக்கள் அனைவரும் அனைத்து பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு, குமான் லாம்பாக் மைதானத்தில் மாநிலத்தில் எதிர்காலம் குறித்த ஆலோசனை பொதுக்கூட்த்தில் கலந்து கொள்ள வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form