உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் அபய் எஸ். ஓஹா. இவர் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியத்திலும் இடம் பெற்றிருந்தார். தற்போது ஓய்வு பெற்றுள்ளதால் கொலிஜியத்திலும் ஒரு இடம் காலியாகிறது.
இந்த நிலையில் முதல் பெண் தலைமை நீதிபதியாக தகுதியுள்ள வி.பி. நாகரத்னா, தற்போது உச்சநீதிமன்றத்தின் 5ஆவது தலைமை நீதிபதியாக உள்ளார். இவர் கொலிஜியத்தில் இடம் பெறுகிறார்.
நாளையில் இருந்து இவரது பெயர் கொலிஜியத்தில் இடம் பெறுகிறது. இவர் ஓய்வு பெறும் 2027 அக்டோபர் 29ஆம் தேதி வரை கொலிஜியத்தில் இடம் பிடித்திருந்தார்.
இனிமேல் நீதிபதி நாகரத்னா தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே. மகேஷ்வரி ஆகியோருடன் கொலிஜியத்தில் இணைகிறார்.
வருகிற திங்கட்கிழமை புதிய கொலிஜியம் பி.ஆர். கவாய் தலைமையில் கூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது காலியிடங்கள் மற்றும் பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்வது குறித்து ஆலோசனை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.