இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

 பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தியது. . சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் இருநாடுகளும் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்தன.

இந்நிலையில், குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரை எல்லை பாதுகாப்புப் படை சுட்டுக்கொன்றது.

சர்வதேச எல்லையை தாண்டிய பிறகு எல்லை வேலியை தாண்ட அந்நபர் முயற்சி செய்ததாகவும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் எச்சரித்தும் தொடர்ந்து அவர் முன்னேறியதால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் அவர் உயிரிழந்தார் என்று எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

முன்னதாக தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹுவை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பின்னர் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. 



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form