ஸ்ரீநகர்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் நிலைகுலைந்த பாகிஸ்தான் காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.00 மணிக்கு ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்டறிந்தனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்பட்டுள்ளது.