புதுடெல்லி:
பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தின.
இந்நிலையில், பாகிஸ்தானின் மற்றொரு போர் விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்து உயிர் தப்பிய விமானி கைது செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தானின் 2 டிரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.