காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது வாரணாசி நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 அன்று அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், ராமரை "புராண கதாபாத்திரம்" என்று அழைத்ததற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார்தாரர் வழக்கறிஞர் ஹரிசங்கர் பாண்டே இதை வெறுக்கத்தக்க பேச்சு என்றும், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 196 (மதத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), பிரிவு 356 (அவதூறு) உள்ளிட்டவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று புகார்தாரர் கோரினார்.
இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட வாரணாசி நீதிமன்றம், விசாரணை தேதியை மே 19-ஆம் தேதி நிர்ணயித்தது. மேலும் இந்த புகார் தொடர்பாக ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுபப்பட உள்ளது.
ராகுல் காந்தி இந்து விரோதி என்றும், ராமரை அவமதித்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.