பாகிஸ்தான் இந்தியா இடையே நிலவிய மோதல் இன்று மாலை சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஜம்முவில் எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர் கொல்லப்பட்டார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
ஆர் எஸ் புரா செக்டாரில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் முகமது இம்தேயாஸ் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே பாதுகாப்பு காரணம் கருதி, ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களின் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.