சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்.. ராணுவம் கடும் பதிலடி - விக்ரம் மிஸ்ரி பேட்டி

 பாகிஸ்தான் இந்தியா இடையே நிலவிய மோதல் இன்று மாலை சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து நடத்திய அவசர செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே இன்று மாலை ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் கடந்த சில மணி நேரங்களாக இந்தப் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி வருகிறது.

இந்திய ராணுவம் இந்த தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்குப் பாகிஸ்தான் தான் பொறுப்பு.

பாகிஸ்தான் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், நிலைமை குறித்து ராணுவம் மிகுந்த விழிப்புடன் உள்ளது. மேலும் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் மீண்டும் மீண்டும் நிகழும் மீறல்களை அதிக பலத்துடன் கையாள ராணுவத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form