வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அசாம் மாநிலத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.